Friday, 15 February 2013

Photos of இல்லங்குடி சாஸ்தா

http://temple.dinamalar.com/news_detail.php?id=10209

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள தாய்விளை இல்லங்குடி சாஸ்தா கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக யாகசாலை பணிகள் காலையில் துவங்கி மகாபூர்ணாகுதி தீபாராதனை, வேதபாராயணம், பிரசாதம் வழங்குதல், ஸ்பர்சாகுதி, ஜூவகும்பங்கள் எழுந்தருளின. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீர் விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பூர்ண புஷ்கலாம்பாள் சமேத இல்லங்குடி ஹரிஹர புத்ர தர்ம சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் திறந்து வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹரிகரமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.




மூலவர்கிழக்கத்தி சாமி
பரிவாரத்தெய்வங்கள்இல்லங்குடி சாஸ்தா, நாராயண சாமி,
பலவேசமுத்து சாமி, சிவன்,
பார்வதிதேவி, கங்காதேவி,வீரபாகு,
வீரமகேந்திரர், பாதாளவடிவு  அம்மன்,
மும்மூர்த்திசாமி, பட்டாணிசாமி,மாசாண
பேச்சி அம்மன், சிவனைந்த
பெருமாள்சாமி, ஐடா முனீஸ்வரர் சாமி,
உட்பட 21 பீடங்கள் வழிபாட்டில் உள்ளன.
நடைத்திறப்புவாரமிருமுறை செவ்வாய் வெள்ளி
மாலை 7.00  மணி
திருவிழாக்கள்புரட்டாசி மாதம் மூன்றாம் செவ்வாய்க்
கிழமையுடன் மூன்றுநாள் வரும்
விதத்தில்கொடைவிழா நடைபெறுகிறது.
நிகழ்த்துக்கலைகள்பேச்சியம்மன் சுடலைமாடசாமி மீது
கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது.
பிறசெய்திகள்இத்தெய்வ வழிபாடு கொற்கைத்
துறைமுகப் பட்டினமாக இருந்த போது
எழுந்ததாகும்.கிடா, கோழி, பன்றி
முதலியவைகள் சாமிக்கு
நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன.


This Temple Located at
 ThaiVilai Village,SathanKulam Tk,Tuticorin,Dt,
Tamilnadu - 628617

3 comments: